அதிகாரம் 95

மருந்து

Listen to this chapter

1
1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று
2
2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்
3
3. அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
4
4. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து
5
5. மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபா டில்லை உயிர்க்கு
6
6. இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்
7
7. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்
8
8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்
9
9. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்
10
10. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து
← சூது குடிமை →