அதிகாரம் 96

குடிமை

Listen to this chapter

1
1. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு
2
2. ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்
3
3. நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு
4
4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்
5
5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று
6
6. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்துமென் பார்
7
7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
8
8. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்
9
9. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
10
10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு
← மருந்து மானம் →