Listen to this chapter
1
1. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்
2
2. புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்றிகழ்வார்பின் சென்று நிலை
3
3. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று
4
4. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து
5
5. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்
6
6. இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகு
7
7. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல்
8
8. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்
9
9. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு
10
10. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை